வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (16:03 IST)

சிம்ப்ளி வேஸ்ட்.. செங்கோட்டையனுக்கு பல்ப் கொடுத்த செந்தில் பாலாஜி

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியை அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பாலானோரின் கவனமும் அரவக்குறிச்சி மீது விழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செந்தில்பாலாஜி என்ற திமுகவின் வலிமையான வேட்பாளர்தான்.
 
தற்போது தொகுதிக்குள் தீவிர பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் செந்தில் பாலாஜி. பிரச்சரத்தின் போது அவர் அதிமுக அமைச்சர் செங்கோட்டயனாஇ விமர்சித்தார். செந்தில் பாலாஜி பேசியது பின்வருமாறு...
செங்கோட்டையன் ஒரு மூத்த அமைச்சராக இருந்தும் புலனாய்வு அமைப்பு எங்கள் கையில் இருக்கிறது என்று ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இதெல்லாம் அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது. 
 
இப்படி ஒரு புலனாய்வுத்துறைதான் ஆர்கேநகர் தேர்தலின்போதும் அறிக்கை அளித்து இருப்பார்கள் போல...  புலனாய்வுத் துறையை இப்படி தேர்தலுக்காக பயன்படுத்தலாமா? இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் நிர்பந்தத்தின் பேரில் பணியாற்றி வருகிறார்கள்.
 
தமிழக முதலமைச்சரும், மோடி அரசும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதேபோல், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பதாக சொல்கிறார். ஆனால் அவர்கள் 50,000 வாக்குகள் வாங்கினாலே அதுவே அவர்களுக்கு சாதனை என பேசியுள்ளார்.