Daily Horoscope
✕

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Written By Mahendran
Updated: செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:35 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என்ற நிலையில் சற்று முன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து தெரிவித்துள்ளார்
 
 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதை அடுத்து 15 நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாசம் ஒரு கோடி!.. இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம்பெண்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.. 3,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு...

திடீரென திசை மாறிய அக்வான் புயல்.. கரையை கடக்கும் இடமாற்றம் குறித்த தகவல்...

ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 100க்கு 100 மதிப்பெண்.. தேர்விலும் புகுந்த ஏஐ....

சோனிய காந்தி புத்தக விழா!.. ராகுல் போன் பண்ணாரா?.. ஸ்டாலின் விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments