வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:08 IST)

செங்கோட்டை-தாம்பரம் ரயிலை திடீரென நிறுத்திய பயணிகள்: பெரும் பரபரப்பு..!

Train
செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற விரைவு ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் எம் 5 பெட்டியில் குளிர்சாதன வசதி வேலை செய்யாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென ரயிலை நிறுத்தினர். 
 
அறந்தாங்கி ரயில் நிலையத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டிருந்ததை அடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்காததால், பயணிகள் கடும் வாக்குவாதம் நடந்தது. 
 
குளிர்சாதன வசதி இல்லாததால், பயணிகள் சிலர் வாந்தி எடுத்து அவதிப்பட்டதாக தகவல்
 
Edited by Siva