வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (17:55 IST)

ஜார்கண்ட் மாநிலத்தில் 3 நாட்களாக கழிவறையில் பயணித்த பயணி.. ரயில்வே போலீசார் விசாரணை..!

Train
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ரயிலில் மூன்று நாட்களாக கழிவறையில் உட்கார்ந்து பயணம் செய்து வந்த பயணியை பிடித்து ரயில்வே போலீஸ் சார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும்  விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் கடந்த மூன்று நாட்களாக கழிவறையில் பயணித்து வந்த சோபன் தாஸ் என்ற 18 வயது வாலிபரை ரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
 
மூன்று நாட்களாக கழிவறையின் கதவு பூட்டப்பட்டுள்ளதாக பயணிகள் அளித்த புகாரை அடுத்து ரயில்வே ஊழியர்கள் கதவை உடைத்து பார்க்கும்போது அந்த இளைஞர் உள்ளே இருந்தது தெரிய வந்தது.  இதனை அடுத்து அவரிடம்  ரயில்வே போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்  
 
மூன்று நாட்களாக ஒரு ரயிலில் கழிவறையில் உட்கார்ந்து பயணம் செய்து வந்த 18 வயது வாலிபால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran