வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (14:07 IST)

சென்னை சாலைகள் படுமோசம்- நடிகர் விஜயகாந்த் கண்டனம்

‘சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு  தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும்’ என  நடிகர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், புதை மின் வடம் பதிப்பு உள்ளிட்ட பணிகளால், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளன.

சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களிடம் இருந்து வசூலிக்கும் திமுக அரசு, சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமலும், நல்ல நிலையில் உள்ள சாலைகளை சேதப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.