Daily Horoscope
✕

திமுக 1000 லேட்டாதான் கொடுத்துச்சி!. நாங்க 2500 சீக்கிரம் கொடுக்கணுமா?!. செங்கோட்டையன் கேள்வி!..

Updated: திங்கள், 27 ஜூலை 2026 (12:44 IST)
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்து 75 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஆட்சியின் மீது அதிமுகவும், திமுகவும் பல விமர்சனங்களை வைத்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்திருக்கிறது.

நீட் தேர்வு தொடர்பாக போராட்டம் செய்த மாணவர்களை போலீசார் தாக்குகிறார்கள்.. காவல் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.. தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு இதுவரை கொடுக்கவில்லை’ என்றெல்லாம் அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளிடம் பேசிய செங்கோட்டையன் ‘திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாயை இரண்டு அரை வருடங்களுக்கு கழித்துதான் கொடுத்தார்கள்.. எங்களை  2500 எப்போது கொடுப்பீர்கள் என தொடர்ந்து கேட்கிறார்கள்.. கண்டிப்பாக முதல்வர் விஜய் விரைவில் இதுபற்றி அறிவிப்பார். முதலமைச்சர் விஜய் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார்..

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் வசதி அமைக்கப்பட வேண்டும் என்பது அவரின் விருப்பம். இது தொடர்பாக மத்திய அரசிடம் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.. நீட் தேர்வு வேண்டாம் என்பதே முதலமைச்சர் விஜயின் கொள்கையை முடிவு.. மேகதாது அணையில் ஒரு செங்கலை கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது.. அதை முதல்வர் விஜய் அனுமதிக்க மாட்டார்’ என அவர் கூறியிருக்கிறார்..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்