வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:57 IST)

சவலைப் பிள்ளை ஸ்டாலின் என்ன செய்து விடுவார்..? செல்லூர் ராஜூ நக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துக்கொண்டார். 
 
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் திமுகவின் கொள்கையையும் ஸ்டாலினையும் விமர்சித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு, கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை திமுக எந்த ஒரு கொள்கைப் பிடிப்புடனும் கூட்டணி அமைப்பது கிடையாது. அவர்களைப் பொறுத்த அளவில் யாரையாவது பிடித்து பதவிக்கு வரவேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள்.
 
ஆனால் நாங்கள் தனித்தும் நின்றுள்ளோம். நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காக கூட்டணி வைப்போம். மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம். எங்கள் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்றார்.
 
மேலும், சர்வ வல்லமை படைத்த கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியாத அதிமுகவை, சவலைப் பிள்ளை ஸ்டாலினால் என்ன செய்ய முடியும் என கேட்டார். இந்த பேச்சு திமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.