வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (14:18 IST)

நான் சட்டையைக் கிழித்துக்கொண்டு வரமாட்டேன் – ஸ்டாலினைக் கலாய்த்த கமல் !

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் திமுக தலைவர் ஸ்டாலினைக் கேலி செய்யும் விதமாக பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து விறுவிறுப்பாக மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கூட்டணிக் குறித்த கேள்வி ஒன்றின் போது பதிலளித்த அவர் திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் கறைப்படிந்தவையே. அதனால் இரண்டு கட்சிகளோடும் கூட்டணி இல்லை எனத் தெரிவித்தார்.

அதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கமலைக் கிண்டலடிக்கும் விதமாக பூம்பூம் மாட்டுக்காரன் எனக் கேலிக் கட்டுரை வெளியிட்டது. இந்நிலையில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியக் கமல் ‘ என்னைப் பகுதிநேர அரசியல்வாதிகள் என்கிறார்கள். முழுநேரமும் அரசியலை நம்பியே இருப்பவர்கள் கண்டிப்பாக ஊழல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.. ஒருவேளை நான் சட்டமன்றத்திற்கு சென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு வரமாட்டேன். அப்படியே சட்டையை யாராவது கிழித்தாலும் வேறு சட்டையை மாற்றிக்கொண்டே வருவேன்’ என திமுக தலைவர் ஸ்டாலினைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.