வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

என்னை மிஞ்சிய விஞ்ஞானியாக செந்தில் பாலாஜி இருக்கிறார்… செல்லூர் ராஜு நக்கல்!

மின் தடைக்கு காரணம் அணில்கள் மின்கம்பிகள் மேல் செல்வதுதான் காரணம் என சொன்ன செந்தில் பாலாஜி குறித்து கேலிகள் உருவாகியுள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மின் வெட்டு அதிகமாக இருக்கிறது. இது சம்மந்தமாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ‘அணில்கள் மின் கம்பிகள் மேல் நடந்து கம்பிகள் உராய்வதால் மின்வெட்டு ஏற்படுவதாக சொல்லி கேலிகளிலும் மீம்ஸ்களிலும் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தெர்மாகோல் கொண்டு நதியில் இருந்து தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க முயன்ற செல்லூர் ராஜுவை நவீன விஞ்ஞானி எனக் கேலி செய்யப்பட்டார். இப்போது இதுகுறித்து பேசியுள்ள செல்லூர் ராஜு ‘செந்தில் பாலாஜி என்னை மிஞ்சிய விஞ்ஞானியாக இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.