புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:14 IST)

நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ: பரபரப்பு தகவல்

நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே அழகுபடுத்தபட்டு வரும் நிலையில் மதுரை செல்லூரில் ரவுண்டானா ஒன்று அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார் 
 
இந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ரவுண்டானா சரிந்து விழுந்தது. இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த கபடி வீரர்களின் சிலைகளும் கீழே விழுந்தன. இதனால் இந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட அதிமுகவினர் பலர் கீழே விழுந்தனர் 
 
இருப்பினும் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் மதுரை செல்லூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரவுண்டானா திறப்புவிழாவின்போதே இடிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது