1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:03 IST)

ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து: நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

Seeman
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் இன்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகி உள்ளார். 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு மீதான விசாரணைக்காக இன்று சீமான் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி அடுத்த மாதம் நான்காம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார். 
 
இந்த வழக்கின் விசாரணைக்காக அடுத்த மாதம் நான்காம் தேதி மீண்டும் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran