1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (17:52 IST)

ஜெயலலிதா ஊழல்வாதிதான்.. அண்ணாமலை கருத்துக்கு சீமான் ஆதரவு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியற்றபடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் நடவடிக்கைகளுக்கு பாஜகவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
 
இந்த நிலையில் ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலையின் கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருவர் செய்த எல்லா தீமைகளும் அவர் இறந்த பிறகு புனிதம் ஆகிவிடாது என்றும் ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலையின் கருத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூறியுள்ளார். சீமானின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva