1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:17 IST)

நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!

தீபாவளி விடுமுறைகள் மற்றும் கனமழை, வெள்ளம் காரணமாக விடுக்கப்பட்ட விடுமுறையை அடுத்து நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
கடந்த வாரம் வியாழக்கிழமை தீபாவளி மற்றும் அதை தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது என்பதும் அதனை அடுத்து திங்கட்கிழமை முதல் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மொழியில் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நின்று உள்ளதை அடுத்து நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது