Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரம்தான் செய்முறை தேர்வு! – 10,11,12ம் வகுப்புகளுக்கு தொடக்கம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:23 IST)
தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நேரடியாக நடைபெற உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. இந்த நிலையில் இன்று முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல கட்டங்களாக இந்த செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நிலையில் இந்த முறை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

எல்லாம் காட்டு

ChatGPT-ல் விரைவில் உரையாடல்களை தனியாக லாக் செய்யும் வசதி.. OpenAI அறிவிப்பு..

ராகுல் காந்தி மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு.. குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தினாரா?

அமெரிக்காவால் கைதான வெனிசுலா அதிபரின் புகைப்படம்... 8 மாதங்களுக்கு பின் வெளியாகிறதா?

ஆஸ்திரியா அரச குடும்பத்து இளவரசியை திருமணம் செய்கிறாரா பிலாவல் பூட்டோ? பரபரப்பு தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments