திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (08:13 IST)

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..!

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், மிதமான மழை காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நாகப்பட்டினத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். மேலும், தஞ்சையில் தற்போது மிதமான மழை பெய்து வரும் நிலையில், தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு சில பள்ளிகளுக்கு தஞ்சை மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva