Daily Horoscope
✕

எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Updated: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (12:05 IST)
தமிழகத்தில் எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. காலம் காலமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்பது தான் மரபு, ஆனால் உச்சநீதிமன்றம் மாலையில் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆகவே தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இறுதியில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனக்கூறிய நீதிபதிகள், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனவும் கூறினர்.
 
அநேகமாக, காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments