திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:55 IST)

ரஜினி, ஸ்டாலின் தலைமையில் இரண்டு அணிகள்: கராத்தே தியாகராஜன்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என சற்றுமுன் ரஜினியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அவ்வப்போது ரஜினியை சந்திப்பது உண்டு. அந்த வகையில் முரசொலி கட்டுரையால் ரஜினியும் திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் ரஜினியை சந்தித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், 'வரும் தேர்தலில் ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என்றும் பாஜகவின் ஊதுகுழலாக கமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட கமல், ரஜினி கூட்டணியிலும் சேர வாய்ப்பில்லை என்பதால் அவர் எந்த கூட்டணியில் இருப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.