1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஓம் என்ற மந்திரத்தின் விளக்கமும் சிறப்புகளும்....!

வேதம் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆதாரமான பிரணவம் எனப்படும் ஓம் என்பதைப் போற்றுகின்றன. பிரணவம் என்றால் என்றும் புதியது. புனிதமானதும், என்றும் புதியதுமான ஓம் என்னும் பிரணவம் அழிவே இல்லாத தத்துவப் பொருளாகும்.
ஓம் என்பது ப்ரணவம். ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு அனைத்தும் ஓம் என்ற  சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும் ஓம் என்பதை பிரித்தால் அ + உ + ம் என்று பிரிக்கலாம்.
 
அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம். உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம். ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்.
 
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மூன்று தொழிழுக்கு உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆகவேண்டும் என்பது நியதி. அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.
 
இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து (வாழ்ந்து) ம்-ல் முடியும் (மறையும்). அதனால் தான் நமது ரிஷிகள் "ஓம்" என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .
 
நாம் சாதாரணமாக எந்த ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம். மூன்று தொழில்கள்  என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பதுதான் ஓம்.
 
ஓம் என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும்  கூறியிருக்கின்றன.