திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (13:12 IST)

ஓபிஎஸ் உண்மையை சொல்லி இருக்கின்றார்: சசிகலா பேட்டி

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் உண்மையை சொல்லி இருக்கிறார் என சசிகலா பேட்டியளித்துள்ளார்
 
 ஆறுமுகசாமி ஆணையத்திடம் கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் கொடுத்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சசிகலா குறித்து ஓபிஎஸ் சில கருத்துக்கள் கூறியுள்ள நிலையில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியபோது என் மீது மதிப்பு இருக்கிறது என உண்மையை சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு தெரிந்த உண்மையை ஏற்று மக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது