வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:43 IST)

சிறையில் இருந்தாலும் அத்திவரதருக்காக சசிகலா என்ன செய்தார் தெரியுமா?

சிறையில் இருந்த போதும் சசிகலா காஞ்சிபுரம் அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரங்களை செய்தாராம். 
 
40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எழுந்தருளி காட்சி அளிக்கும் அத்திவரதரை தரிசிக்க பல லட்ச கணக்கான மக்கள் வந்து சென்றனர். ஆனால், கடவுள் பக்தி அதிகம் உள்ள சசிகலாவால் அத்திவரதரை தரிசிக்க இயலவில்லை. 
 
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவரால் அத்திவரதரை தரிசிக்க முடிவில்லை. இருப்பினும் சிறைக்குள் இருந்துக்கொண்டு சசிகலா அத்திவரதரின் சிறப்பு அலங்காரங்களுக்கு உதவினாராம். 
ஆம், அத்திவரதரை தரிசிக்கும் கடைசி நாட்களில் கூட்டம் நெருக்கி தள்ளியது. அதனால் பக்தர்களுக்காக 2 கிமீ தூரத்துக்கு பந்தல் போடப்பட்டது. இந்த செலவு முதல், அத்திவரதரின் சிறப்பு அலங்காரங்களும் சசிகலா தரப்பிலேயே செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அதோடு, சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி அதை அத்திவரதருக்குப் பூசியதுடன், நீல நிற பட்டாடை, துளசி பட்டாடை என அலங்காரங்களுக்கு சசிகலா தரப்பு காணிக்கையாக சிறு தொகையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.