புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:43 IST)

அத்திவரதர் உண்டியல் தொகை இவ்வளவா? ஒரு ஆச்சரிய தகவல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அத்திவரதர் சயன நிலையிலும் நின்ற நிலையிலும் காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் வருகை தந்தனர்.
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் உற்சவத்தில் வைக்கப்பட்ட உண்டியலில் வசூலான தொகை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மொத்தம்  10 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 129 ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
 
அத்திவரதர் வைபவத்தை அடுத்து 18 உண்டியல்கள் ஆங்காங்கே காஞ்சி நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. இந்த உண்டியல்களில் வசூலான  காணிக்கைக்கள் சமீபத்தில் எண்ண தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 10 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 129 ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் தங்கம் 165கிராமும், வெள்ளி 5கிலோ339கிராமும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.