Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்லை! – கடையை மூடிய சரத்குமார்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 25 ஜனவரி 2023 (16:26 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்த சமக தலைவர் சரத்குமார் தன் முடிவை அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சிறிய கட்சிகள் சில தனித்து போட்டியிடலாமா அல்லது பெரிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

இந்த தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அளித்துள்ளது. ம.நீ.மவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

நேற்று இடைத்தேர்தலில் தான் தனித்து போட்டியிட கூட தயார் என்றும், நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் பேசியிருந்த சமக தலைவர் சரத்குமார் தற்போது இந்த இடைத்தேர்தலில் சமக போட்டியிடவில்லை என கூறியுள்ளார். மேலும் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவும் தரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சின்ன சின்ன கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments