திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (17:28 IST)

''பவர் சீட்டுல வந்து உட்கார்ரவன்ட தான் இருக்கும்'' வாரிசு பட டிரைலர் ரிலீஸ்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரிசு படத் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின்  டிரைலரை தற்போது  ரிலீஸ் செய்துள்ளது.

அதில், சரத்குமாr- ஜெயசுதா ஆகியோரின் மகனாக விஜய் நடித்துள்ளார்.  கூட்டுக்குடும்பத்தை மைப்படுத்தியும், விறுவிறுப்பாகவும் ஆக்சனாக அமைந்துள்ள இப்படத்தின் டிரைலரில், விஜய்- ராஷ்மிகா உள்ளிட்ட நடிகர்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

வீடுங்கறது கல்லு மண்ணுதான் ஆனால் குடும்பம் அப்படியா, எல்லா இடமும் நம்ம இடம் தான்…. நல்ல வேட்டக் காரரனுக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும், கண்ணு திறந்துதான் இருக்கனும், பவர் சீட்டுல இல்ல சார் வந்து உட்கார்ரவன்ட தான் இருக்கும் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சரத்குமாரின் கடைசி மகனாகவும், புகைப்படக் கலைஞராகவும், இருக்கும் விஜய், தன் தந்தையும் பிசினஸ் மேனுமான சரத்குமாரின் சார்பில் வந்து நல்லபடியாக பிசிஸஸ் கவனிப்பது, எதிரிகளை வேட்டையாடுவதும் இந்தக் கதையின்  மையக் கரு என்று தெரிகிறது.

மேலும், பூவே உனக்காக படத்தின் விஜய்யின் டயலாக்கை யோகி பாபு கலாய்க்க அதற்கு விஜய் கவுண்டர் அடிக்கும் காமெடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.