Daily Horoscope
✕

எங்களுக்கு மேயர் பதவி வேணும்! – அதிமுகவுக்கு அப்ளிகேஷன் போடும் சரத்குமார்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 11 நவம்பர் 2019 (10:19 IST)
தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் மேயர் பதவி கேட்க இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மூண்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது “உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதிமுக அரசு 2 மாதம் கூட நிலைக்காது என்று கூறினார்கள். ஆனால் இன்றுவரை அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள மாநகரங்களில் எங்கள் கட்சி வலிமையாக இருக்கிறது என்பதை அதிமுகவிடம் சுட்டிக்காட்டி மேயர் பதவிகள் கேட்கலாம் என திட்டமிட்டுள்ளோம். கேட்க வேண்டியது எங்கள் கடமை. அவர்கள் பரிசீலித்து முடிவு சொல்லட்டும்” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மசோதாவை நாங்கள் ஆதரிப்போம்.. முடிவில் மாற்றமில்லை.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்..

Delimitation மசோதாவிற்கு பின்.. ஒட்டுமொத்த தென்னிந்தியா 195 தொகுதிகள்.. உபி - பீகார் மட்டும் 180 தொகுதிகள்..

சென்னை, மும்பை என பறக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி.. மசோதாவை தடுத்துவிடுவார்களா?

சகோதரர் ஸ்டாலின்!.. மறுபரீசலனை பண்ணுங்க!.. ராகுல் காந்தி கோரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments