திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (10:14 IST)

எங்களுக்கு மேயர் பதவி வேணும்! – அதிமுகவுக்கு அப்ளிகேஷன் போடும் சரத்குமார்!

தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் மேயர் பதவி கேட்க இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மூண்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது “உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதிமுக அரசு 2 மாதம் கூட நிலைக்காது என்று கூறினார்கள். ஆனால் இன்றுவரை அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள மாநகரங்களில் எங்கள் கட்சி வலிமையாக இருக்கிறது என்பதை அதிமுகவிடம் சுட்டிக்காட்டி மேயர் பதவிகள் கேட்கலாம் என திட்டமிட்டுள்ளோம். கேட்க வேண்டியது எங்கள் கடமை. அவர்கள் பரிசீலித்து முடிவு சொல்லட்டும்” என கூறியுள்ளார்.