1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (10:31 IST)

சமஸ்கிருதம் தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி: கவர்னர் ரவி பேச்சு..!

சமஸ்கிருத மொழியை தமிழுக்கு இணையான மொழி என தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழக கவர்னர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை குறித்து அவர் பேசிய பேச்சுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே இன்று கவர்னர் ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, ‘ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றும் தமிழ் மீது ஹிந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்றும் கூறினார். 
 
மேலும் சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக கவர்னர் ரவியின் இந்த கருத்துக்கு மீண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran