திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (17:59 IST)

பிச்சைக்காரன் -2 பட 'கோயில் சிலையே' பாடல் ரிலீஸ்

pichaikaran 2
பிச்சைக்காரன் -2 படத்தில் இடம்பெற்றுள்ள 'கோயில் சிலையே' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி  நடித்து இசையமைத்து   வெளியான படம் பிச்சைக்காரன் . இப்படத்தை இயக்குனர் சசி இயகினார். இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

இதையடுத்து, பிச்சைக்காரன் -2 படத்தை விஜய் ஆண்டனி, இயக்கி, நடித்து இசையமைத்துடன் தயாரித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது  நடிகர் விஜய் ஆண்டனி, விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று, குணமடைந்தார்.

தற்போது அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில்,  பிச்சைக்காரன் -2 படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், பிச்சைக்காரன் -2 படத்தில் இடம்பெற்றுள்ள கோயில்சிலையே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.