வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:47 IST)

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; 2 தமிழர்கள் பலி!

indian army
பஞ்சாப் மாநில ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள இந்திய ராணுவ முகாமில் ஏராளமான ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் அதிகாலை நேரத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக எண்ணிய அதிவிரைவுப்படை உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். ஆனால் பயங்கரவாதிகள் யாரும் இல்லை.

உடனே முகாமை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காடை சேர்ந்த கமலேஷ். மற்றொருவர் தேனியை சேர்ந்த யோகேஷ் குமார். இருவரது உடலும் இன்று அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

பஞ்சாப் ராணுவ முகாமில் மர்மமாக நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K