திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (13:53 IST)

மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது: பல்கலை நிர்வாகம் எச்சரிக்கை

periyar university
மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பெரியார் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு ஊடகத்திலும் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் அதை மீறி பேட்டி கொடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் எச்சரிக்கை தெரிவித்துள்ளார் 
 
பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்த குமார் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்தே மாணவர்கள் இதுகுரித்து ஊடகங்களில் பேட்டியளித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது