சேலத்தில் 4200 பேர் கூடி செய்த வினோத செயல் - கின்னஸ் சாதனை கிடைக்குமா?
சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழவில் மாவட்ட ஆட்சியர் உட்பட 4200 பேர் கலந்து கொண்டு கைகழுவி கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளனர்.
நேற்று உலகம் முழுவதும் கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு கைகழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் எமெல்ஏக்கள் செம்மலை, சகிதிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
’இந்தியா போன்ற நாடுகளில் கைகளால் உணவு உட்கொள்பவர்கள் அதிகமாக உள்ளனர். உணவு உண்ணும் போது நம் கைகளில் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நம் வயிற்றுக்குள் சென்று உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே நாம் நம்மையும் பாதுகாத்து நமது மாவட்டத்தை சுத்தமான மாவட்டமாக மாற்ற வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் ரோகினி அவர்கள் கூறினார்.
இதே போன்ற இன்னொரு நிகழ்ச்சி சேலம் சோனா கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கினார் ரோகினி. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என ஆயிரக்கணக்கானோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு மருத்துவ நிபுனர்கள் முறையாக கை கழுவுவது மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவரும் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் சோப் உபயோகப்படுத்தி கைகழுவினர். மொத்தம் 4200 பேர் கைகழுவியுள்ள இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் பதிவுக்காக அனுப்ப முயற்சி செய்யப்பட்டு வருகிறது.