வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:17 IST)

கலெக்டர் தலையில் செருப்பு வைக்க முயன்ற நபர் கைது

கலெக்டர் தலையில் செருப்பு வைக்க முயன்ற நபர் கைது
சேலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தலையில் மர்மநபர் ஒருவர் செருப்பு வைக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
சேலத்தில் இன்று கலெக்டர் ரோகிணி தனது அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுவை வாங்கி வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கலெக்டரிடம் மனு ஒன்று கொடுத்தார்.
 
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரோகிணி அதை பிரித்து படித்து கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் திடீரென தனது செருப்பை கழுட்டி கலெக்டர் தலையின் மீது வைக்க முயற்சித்தார். இதனால் ரோகிணி அங்கிருந்து பயந்து ஓடினார். உடனே அந்த நபர் அங்கிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி தலையில் செருப்பை வைத்தார்.
கலெக்டர் தலையில் செருப்பு வைக்க முயன்ற நபர் கைது
 
இதனையடுத்து, அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அந்த நபர் பெயர் ஆறுமுகம் என்று தெரியவந்துள்ளது.