வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:22 IST)

இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த தம்பதியினர்.. சேலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

சேலம் அருகே ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலையை அந்த வீட்டில் தங்கி இருந்த தம்பதியினர் செய்திருப்பார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் சூரமங்கலம் புது ரோடு என்ற பகுதியில் புதிதாக கணவன் மனைவி என ஒரு தம்பதியினர்  குடி வந்ததாகவும் அந்த வீட்டிற்கு மறுநாளே புதிய இளைஞர் ஒருவர் வந்ததாகவும் தெரிகிறது.

மூவரும் போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  புதிதாக குடிவந்த தம்பதி இருந்த வீட்டின் மொட்டை மாடியில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனே போலீசார் அந்த நபரை பரிசோதனை செய்தபோது அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது தெரிந்து வந்தது. அதுமட்டுமின்றி அந்த வீட்டில் குடியிருந்த தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்

Edited by Siva