திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (13:28 IST)

கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி.. விபத்து போல் நாடகம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

கணவனை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சன்பிரியா ஆகிய  இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் 
 
இந்த நிலையில் பிரேம்குமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் காலமானார். ஆனால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது பிரேம்குமார் மனைவி சன்பிரியா மீது சந்தேகம் இருந்தது.  
 
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சன்பிரியா மற்றும்  ஹரி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பிரேம்குமார் இறந்த இடத்திற்கு காரில் வந்தே அவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துவிட்டு சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து சன் பிரியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.  ஹரி கிருஷ்ணன் உடன் தகாத உறவில் சன்பிரியா இருந்ததால் கணவரை கொலை செய்து விட்டதாக அடுத்த கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva