1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (08:29 IST)

கிணற்றில் விழுந்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன்.. புதுமண தம்பதிகள் பரிதாப பலி..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மனைவி கோபித்துக் கொண்டு தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அபிராமி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த தம்பதிகள் புத்தாண்டு கொண்டாடிய நிலையில் திடீரென இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது 
 
இதனால் மணமடைந்த அபிராமி அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், மனைவியை காப்பாற்றுவதற்காக அதே கிணற்றில் குதித்தார். இருவரும் கிணற்றில் பரிதாபமாக பலியாகி மிதந்தனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்  புத்தாண்டு தினத்தில் சாதாரண வாய்த்தகராறு காரணமாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran