எட்டு வழி சாலைக்கு தடை தொடரும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைப்பது தொடர்பான விசாரணையில் தடையை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் – சென்னை இடையே எட்டு வழி சாலை அமைத்தல் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பலர் எட்டுவழி சாலை திட்டத்தை நிறைவேற்ற கூடாது என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற நிலையில் அவசர அவசரமாக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏன் என கேள்வியெழுப்பியதுடன் சுற்றுசூழல் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை மேற்கொள்ள தடை விதித்தது.
இந்நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் மீதான விசாரணையில் பொதுமக்களின் விருப்பமின்றி திட்டத்தை நிறைவேற்றுவது சரியா என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இந்த வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக அளித்த தடை உத்தரவை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.