திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (20:51 IST)

முக்கியப் பொறுப்பிலிருந்து சகாயம் நீக்கம் !

முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டிப் பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்த சகாயம் ஐஏஎஸ்க்கு தற்போதுபணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மக்கள் பாதை அமைப்பில் வழிகாட்டிப் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஐஏஎஸ் அதிகாரியும் இளைஞர்களின் ரோல்மாடலும் நேர்மைக்கும் உண்மைக்கும் உதாரணமாயிருக்கிற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் தற்போது தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்தார். இதற்கு முன் பல்வேறு பொற்ப்புகளில் வகித்து அரசியல் வாதிகளுக்கும் அரசுக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்தார்.

எனவே இன்று சகாயம் ஐஏஎஸ் தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்து அவர் அரசியலில் குதிக்கப்போகிறாரா என இளைஞர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அவர் மக்கள் பாதை அமைப்பில் முக்கிய பொறுப்பில் சேர்ந்தார்.

இந்த அமைப்பில், உள்ள தனக்கு முக்கியமானவர்களுடன் மட்டும் சகாயம் அவர்கள் பேசி வந்ததாக சிலர் கூறும் நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளாக எந்தச் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை எனப் புகார் எழுந்தது. எனவே மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டிப் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர்,  இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சகாயம் ‘நேர்மையாக செயலபட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்றுகூட அழைத்துக் கேட்கவில்லை. மேலும் நான் காந்தி நினைவு நாளான ஜனவரி 31 ஆம் தேதி என்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டேன். அந்த கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை’ என ஆதங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.