திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (07:59 IST)

இப்போ இது தேவையா? பிரதமருக்கு 69 ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்!

இப்போ இது தேவையா? பிரதமருக்கு 69 ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்!
டெல்லியில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது என்பதால் புதிய நாடாளுமன்றம் கட்ட சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்பிக்கள் வரை அமரலாம் என்றும் இந்த கட்டிடம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் இந்த கட்டடம் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. மூன்று தளங்களில் முக்கோண வடிவில் கட்டப்பட இருக்கும் இந்த கட்டிடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார தேக்கநிலை இருக்கும் நிலையில் 11 ஆயிரம் கோடி செலவழித்து புதிய நாடாளுமன்றம் தேவையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்/ இதனை அடுத்து முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர் 
 
அந்த கடிதத்தில், ‘நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வரும் இந்த நேரத்தில் ரூபாய் 13 ஆயிரம் கோடியை வீணாக்க வேண்டாம் என்றும் புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் பிடிவாதம் பிடிப்பது அதிகாரத்தை காட்டுவதாக உள்ளது என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியை கைவிட வலியுறுத்தி முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் 69 பேர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது