திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (17:34 IST)

சகாயம் ஐஏஎஸ்-ன் கடைசி ஆசையைக் கூட ஏற்காத அரசு!

தமிழக ஐஏஎஸ் அதிகாரியும் இளைஞர்களின் ரோல்மாடலும் நேர்மைக்கும் உண்மைக்கும் உதாரணமாயிருக்கிற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் தற்போது தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில்  பணியாற்றி வந்தார். இதற்கு முன் பல்வேறு பொற்ப்புகளில் வகித்து அரசியல் வாதிகளுக்கும் அரசுக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு முறைப்பட விண்ணப்பித்திருந்தார். எனவே இன்று சகாயம் ஐஏஎஸ் தற்போது  பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சகாயம் ‘நேர்மையாக செயலபட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்றுகூட அழைத்துக் கேட்கவில்லை. மேலும் நான் காந்தி நினைவு நாளான ஜனவரி 31 ஆம் தேதி என்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டேன். அந்த கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை’ என ஆதங்கப்பட்டுள்ளார்.