திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (13:45 IST)

நான் எதுக்காக போய் பாஜகல சேரணும்? – குழப்பமான எஸ்.ஏ.சி!

நடிகை குஷ்பூவை தொடர்ந்து தான் பாஜகவில் இணைய போவதாக வெளியான வதந்திகள் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் சில பிரபலங்களும் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் திடீரென விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியானது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அதில் “நான் பாஜகவில் இணைவது குறித்து யோசித்ததே இல்லை. நான் பாஜகவில் இணைய போவதாக எதற்காக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை” என குழப்பத்துடன் கூறியுள்ளார்.