ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:10 IST)

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஒருசேர ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திய எஸ் பி வேலுமணி மற்றும் விஜய பிரபாகரன்...

பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி கோவை மாவட்ட அதிமுக நகர் சார்பில் அவர்கள் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து இருந்து ஊர்வலமாக சென்று அவிநாசி சாலை உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக விஜயபிரபாகரன் அதிமுக அலுவலகம் வருகை தந்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுகவுடன் சேர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 
அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்.....
 
பேரறிஞர் பெருந்தகை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் இயக்கத்தை உருவாக்கி இன்றைக்கு சாதாரண ஏழை எளியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அதேபோல சாமானியனும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக ஆகலாம் என்பதற்கு வித்திட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடன் 116வது பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் கோவை மாவட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி யார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கழகக் கொடியேற்று இனிப்பு வழங்கி சிறகிழக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தார் பேரறிஞரின் பிறந்தநாளை ஒட்டி அவரும் நேரடியாக இங்கு வந்து எங்களுடன் சேர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 
 
மேலும் அண்ணா பிறந்த நாளில் கண்டிப்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கோவை மாவட்டத்தில் எந்த திட்டமும் வரவில்லை இன்றைக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதிகமான திட்டங்கள் தந்து கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகள் இல்லாத வார்த்தையை குறிப்பாக சாலைகள் பாலங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் என அத்தனை திட்டங்கள் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விமான நிலைய விரிவாக்கம் என்று பல்வேறு திட்டங்களை தந்த முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்கள் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மீண்டும் மக்கள் நல திட்டங்களை எல்லாம் தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த பிறந்தநாளில் சபதம் ஏற்று எடப்பாடி யார் அவர்களை முதலமைச்சர் ஆக்குவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் 
 
இன்றைக்கு அருகில் இருக்கக்கூடிய கேரளா மாநிலத்தில் மற்றும் கோவை மாவட்டத்தில்  அதிகமான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர் சகோதரர்கள் போல என்றைக்கும் அண்ணா திமுகவிற்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி எங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர் பண்டிகை சிறப்பான முறையில் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகிறது ஆகவே இங்குள்ள அத்தனை மக்களுக்கும் ஓனம் வாழ்த்துக்களை அண்ணா திமுக சார்பாகவும் எடப்பாடி யார் சார்பாகவும் எங்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.