ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (17:04 IST)

GOAT-ல் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடுவதை பார்க்க புல்லரிக்கிறது.! விஜய பிரபாகரன்...

Vijaya Prabakaran
விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள தி கோட் திரைப்படத்தில் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்க்கும் போதே புல்லரிக்கிறது என்று மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
 
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை விஜய பிரபாகரன் வழங்கினார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு கலகலப்பாக உரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  விஜய் அண்ணன் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். 

ஆனால், அரசியல் என்று பார்க்கும் போது தேமுதிக 20 ஆண்டு பழமையான கட்சி என்றும் விஜய் அண்ணன் முதலில் அரசியலில் அவரது கொள்கை மற்றும் மக்கள் வரவேற்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையை சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
 
அவர் எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை என குறிப்பிட்ட விஜயபிரபாகரன், மக்களுக்கு நல்லது செய்வதற்காக கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும், அவர் கட்சியை முழுமையாக தொடங்கிய பிறகு எந்த கூட்டணிக்கு செல்கிறார் என்பது தெரியும் என்றும் கூறினார். நான் கடந்த மூன்று நாட்களாகவே தொடர் சுற்று பயணத்தில் உள்ளதால்  என்னால் இன்னும் கோட் படத்தை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார். 

ஆனால், அந்த படத்தில் அப்பா வரும் காட்சிகளை சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றும் தியேட்டரில் மக்கள் அந்த காட்சிகளை கொண்டாடும் விதத்தை பார்க்கும் போதே புல்லரிக்கிறது என்றும் விஜயபிரபாகரன் குறிப்பிட்டார். விரைவில் படத்தை பார்த்து விடுவேன் என்றும் தெரிவித்தார்.