செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:39 IST)

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம்: ரூ.850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

அமெரிக்காவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீடுகளை ஏற்பதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் அங்கு அவர் முதலீடுகளை ஏற்கும் பணியை தொடங்கி விட்டதாக தகவல்கள். 
 
முதல் கட்டமாக சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் புரிந்துணர்வு கையெழுத்தானதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
 
செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமெரிக்க நிறுவனம் அமைக்க உள்ளதாகவும், அதேபோல் சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva