Daily Horoscope
✕

ஊரடங்கை மீறியதால் வந்த வினை: ரூ.6.05 கோடி அபராதம்!!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 18 மே 2020 (11:46 IST)
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.88 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.     
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.88 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 4.60 லட்சம் வழக்குகள் பதிவு, ரூ.6.05 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments