1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (15:04 IST)

75 போதல 100-ஆ போட்டு கொடுங்க: ஈபிஎஸ்-ஐ நாடிய செல்வமணி!

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைததாக ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல். 
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 1 முதல் திரைப்பட படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதித்தது. 75 நபர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பை நடத்த வேண்டும் எனவும் படக்குழுவினர் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்தது. 
 
இந்நிலையில், சினிமா படபிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த 75 பேரை 100 பேராக உயர்த்த வேண்டும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 60 படங்கள் பாதியில் நிற்கிறது. ஆகையால் 100 பேராக அனுமதித்தால் மட்டுமே அனைத்து படங்களும் படப்பிடிப்பை துவங்கும் என்றார். 

ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியீடுவது யாருக்கும் பாதிப்பு இல்லாம் வெளியே வர வேண்டும், திரையரங்கம், தயாரிப்பாளர்கள் இருவரும் பாதிக்காத வகையில் ஓடிடி விஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.