வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (07:23 IST)

காவலர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டன டுவீட் போட காரணம் என்ன? ரஜினியின் அதிரடி பதில்

ஐபிஎல் போட்டியின் போது காவலர்கள் தாக்கப்பட்டதற்கு, கண்டன டுவீட் போட்ட ரஜினிகாந்த அது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது நாட்டில் பல்வேறு அநியாயங்கள் நடைபெறுகிறது, அதற்கெல்லாம் வாயவே திறக்காத ரஜினி, காவலர்கள் தாக்கப்பட்டதற்கு மட்டும் ஏன் அப்படி கொந்தளித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. 
இதற்கு பதிலளித்த ரஜினி போலீசார் சீருடையில் இருக்கிற போது, அவர்களை தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அதே நேரம் சட்டம் கையில் இருக்கிறது என்று போலீசாரும் வரம்பு மீறி போகக்கூடாது என அதிரடியாக பதிலளித்தார்.