ரஜினியின் திடீர் அமெரிக்க பயணம் ஏன்?

Last Modified திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் 'காலா' படத்தை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றிரவு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சமீபகாலமாகவே ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று உடல்பரிசோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :