வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (08:23 IST)

இந்த 8 காரணங்களால் தான் கட்சியை தொடங்கினேன்: மனம்திறந்த கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கியதற்கு வித்திட்ட 8 சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
 
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கி கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களின் வேட்பாளர்களை களமிறக்குகிறார். தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், தமிழகமெங்கிலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல் பேசுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதற்கான  8 சம்பவங்களை பற்றி விவரித்தார். 
 
1. பணமதிப்பிழப்பு
2. ஜல்லிக்கட்டு போராட்டம்
3. கூவத்தூர் கூத்து
4. தமிழக விவசாயிகள் போராட்டம்(டெல்லியில்)
5. நீட் தேர்வு(மாணவி அனிதா தற்கொலை)
6. எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை
7. அதிமுக பேனரால் கோவையில் ரகுநாத் மரணம்
8. தூத்துக்குடி துப்பாக்கி சூடு