வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (05:54 IST)

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்: திடீரென பின்வாங்கிய கமல்ஹாசன்

கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் கமல்ஹாசன் கோவை, தென்சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கியது ஏன் என்று அவரது கட்சியினர்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 
40 தொகுதிகளின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள்
 
காஞ்சிபுரம் - தங்கராஜ்
கள்ளக்குறிச்சி - கணேஷ்
திருவண்ணாமலை- அருள்
ஆரணி - சாஜித்
நாமக்கல் - ஆர்.தங்கவேலு
ஈரோடு - சரவணக்குமார்
ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்
கரூர் - ஹரிஹரன்
ரெம்பலூர் - அருள் பிரகாசம்  
தஞ்சாவூர்: சம்பத் ராமதாஸ்
சிவகங்கை - சிநேகன்
மதுரை - எம்.அழகர்
தென் சென்னை - ரங்கராஜன்
கடலூர் - அண்ணாமலை
விருதுநகர் - முனியசாமி
தென்காசி - முனீஸ்வரன்
திருப்பூர்: சந்திரகுமார்
பொள்ளாச்சி: மூகாம்பிகை ரத்னம்
கோவை: மகேந்திரன்
திருவள்ளூர் - லோகரங்கன்
சென்னை வடக்கு - ஏஜி மவுரியா
மத்திய சென்னை - கமீலா நாசர்
ஸ்ரீபெரும்பதூர் - சிவக்குமார்
அரக்கோணம் - ராஜேந்திரன்
வேலூர் - ஆர். சுரேஷ்
கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா
தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்
விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
சேலம் - மணிகண்டன்
நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்
திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர்
திருச்சி - வி.ஆனந்தராஜா
சிதம்பரம் - டி.ரவி
மயிலாடுதுறை - ரிபாஃயுதீன்
நாகை - கே.குருவையா
தேனி - ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - டி.டி.எஸ் பொன்குமரன்
நெல்லை - என்.வெண்ணிமலை
குமரி - எபிநேசர்
புதுச்சேரி - எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்