1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (12:36 IST)

மத்திய அரசு அதிமுகவை எப்படி வழிக்கு கொண்டு வந்தது? ஸ்டாலின் விளக்கம்

பாஜகவுக்கு அதிமுக ஆதரவளித்தது குறித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். 
நேற்று பாராளுமன்றத்தில் தெலுங்கு தேச கட்சி, மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகளும் தீர்மானத்திற்கு எதிராக 325 வாக்குகளும் கிடைத்தது. அதிமுக தரப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாகவே வாக்களிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் மீது மாநில அரசு அதிருப்தியில் இருப்பதாக கூறி வந்த நிலையில், அதிமுக இப்படி மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது குழப்பத்தை உண்டாக்குகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின், நீட் தேர்வு, 15- வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்தையும் கொண்டு வந்த மத்திய அரசிற்கு எதிராக அ.தி.மு.க அரசு எதற்காக வாக்களிக்கவில்லை என்பது தெரிந்துள்ளது. மத்திய அரசு எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரின் வீட்டில் ரெய்டு நடத்தி தங்களின் குறிக்கோளை அடைந்துவிட்டது என கூறியுள்ளர் ஸ்டாலின்.