1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (08:15 IST)

தக்க பாடம் புகட்டப்படும்: அதிமுகவுக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

நேற்று பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 126 எம்பிக்களும், எதிராக 325 எம்பிக்களும் வாக்களித்தனர். இதில் அதிமுகவின் 37 எம்பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அதிமுகவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
ஆந்திர பிரதேச மாநிலம் மொத்தமும் நீதிக்காக காத்திருந்தது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், ஆனால் அவர்கள் நீதியை மீறிவிட்டதாகவும், பிரதமரின் பேச்சு புண்படுத்துவதாக இருந்ததாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார். மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் தங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் பாஜகவை ஆதரிக்கும் மற்ற கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும்,” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்